தங்கம் விலை மேலும் உயரும்? - சர்வதேச சந்தையில் 3 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் முன்பேர வர்த்தகத்தில் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், எந்த நேரத்திலும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மேலும் ஏறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உக்ரைனின் நிச்சயமற்ற சூழலால் டாலர் மதிப்பு குறையும் ஆபத்து இருப்பதால் உலக நாடுகளும் முதலீடுகளை டாலரில் இருந்து தங்கத்தக்கு மாற்றத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவும் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உலகளாவிய சந்தைகளில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 3 மாத அதிகபட்சமாக 1,859 ஆக இருந்தது. முந்தைய அமர்வில், நவம்பர் 19க்குப் பிறகு அதிகபட்சமாக 1,865.15 டாலராக ஆக உயர்ந்தது.

அமெரிக்க தங்க எதிர்காலம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.9 சதவீதம் உயர்ந்து 1,859.00 டாலராக ஆக இருந்தது.

பியூச்சர்ஸ் மார்க்கெட் என அழைக்கப்படும் முன்பேர வர்த்தகத்திலும் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. எம்எசிஎக்ஸ் -இல் தங்கத்தின் விலை இன்று காலை 0.8 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட 3 மாத அதிகபட்சமாக ₹ 49,506 ஆக இருந்தது.

அதே நேரத்தில் வெள்ளியின் விலை 1 சதவீதம் உயர்ந்து கிலோவுக்கு ₹ 63,630 ஆக இருந்தது,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

29 mins ago

வணிகம்

25 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்