கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது: எஸ்பிஐ விதிமுறைக்கு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களைக் கடந்திருந்தால் அவர் பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாகப் பணியமர்த்தப்பட மாட்டார் என்றும் அதேபோல் அவர் மூன்று மாதத்துக்கும் அதிகமான கர்ப்பக்காலத்தில் இருந்தால் பதவி உயர்விலும் பரிசீலிக்கப்படமாட்டார் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி. பெண்களின் கர்ப்பத்தை ஒட்டி வெளியிட்டுள்ள இந்த புதிய விதிமுறை பரவலாக கண்டனங்களை சம்பாதித்து வருகிறது.

ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களைக் கடந்திருந்தால் அவர் பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாகப் பணியமர்த்தப்பட மாட்டார் என்றும் அதேபோல் அவர் மூன்று மாதத்துக்கும் அதிகமான கர்ப்பக்காலத்தில் இருந்தால் பதவி உயர்விலும் பரிசீலிக்கப்படமாட்டார் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ஒருவேளை அவர் பணியில் சேர அத்தனை தகுதியையும் பெற்றிருந்தால், பேறுகாலம் முடிந்த 4 மாதங்களுக்குப் பின்னரே மருத்துவ ரீதியாக பணியில் சேர தகுதியானவராகக் கருதப்படுவார் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. பினோய் விஸ்வம் (சிபிஎம்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்ப்பத்தை அவமதிப்பது தாய்மைக்கு எதிரான குற்றம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு. எஸ்பிஐயின் விதிமுறைகள் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதில் நிதியமைச்சர் தலையிட்டு இந்த பாலின பாகுபாடு நிறைந்த சுற்றறிக்கையை எஸ்பிஐ உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, 6 மாத கர்ப்பத்தில் இருக்கும் பெண்களைக்கூட எஸ்பிஐ பணியமர்த்தியது. ஆனால், மருத்துவர்களின் தகுதிச் சான்றிதழ் அவசியமாக வைத்திருந்தது. ஆனால், புதிய சட்டத்திருத்தத்தில் இந்த காலகட்டத்தை 3 ஆகக் குறைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்