பி.எஃப். வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தியது மத்திய அரசு

By பிடிஐ

ஊழியர் வருங்கால வைப்புநிதி மீதான வட்டி விகிதத்தை 0.1% அதிகரித்து உத்தரவிட்டுள்ளது மத்திய நிதியமைச்சகம்.

இதன் மூலம் 8.7%-லிருந்து தற்போது 8.8% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் அறிவித்ததையடுத்து அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் 8.8% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு 3-வது முறையாக தங்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. முதலில் பி.எஃப். எடுப்புத் தொகைக்கு வட்டி விதிப்பை கடும் எதிர்ப்பை அடுத்து கைவிட்டது, பிறகு பணம் எடுப்பதற்கு சில கெடுபிடிகளை விதித்தது பிறகு அதையும் கைவிட்டது, தற்போது 8.7% என்று குறைத்த வட்டியை மீண்டும் 8.8% என்று திருத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்