ரிலையன்ஸ் நிர்வாகம் அம்பானி வாரிசுகளுக்கு கைமாறுகிறது?

By செய்திப்பிரிவு

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் தலைமை மாற்றம் பற்றிக் குறிப்பிட்டார். அவர் உட்பட மூத்தவர்களிடம் இருந்து இளைய தலைமுறையினருக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார்.

குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்தநாளான டிசம்பர் 28-ம் தேதியான நேற்று ரிலையன்ஸ் குடும்ப தின விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வரும் ஆண்டுகளில் உலகின் வலிமையான மற்றும் புகழ்பெற்ற இந்திய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறும். பசுமை எரிசக்தி துறை அத்துடன் சில்லறை மற்றும் தொலைத்தொடர்பு வணிகம் முன்னெப்போதும் இல்லாத உயரத்தை எட்டியுள்ளது.

பெரிய கனவுகள் மற்றும் சாத்தியமற்றதாக தோற்றமளிக்கும் இலக்குகளை அடைவது என்பது சரியான நபர்களையும் சரியான தலைமைத்துவத்தையும் பெறுவதாகும். ரிலையன்ஸ் இப்போது ஒரு முக்கியமான தலைமை மாற்றத்தை ஏற்படுத்தும் செயலில் உள்ளது. எனது தலைமுறையைச் சேர்ந்த மூத்தவர்களிடமிருந்து அடுத்த தலைமுறை இளம் தலைவர்களுக்கு இந்த மாற்றம் செல்ல வேண்டும். இந்த செயல்முயை நாம் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

எனினும் இந்த மாற்றம் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது, எப்போது முதல் நடைமுறைக்கு வருமு் என்பது குறித்த விவரங்களை முகேஷ் அம்பானி தெரிவிக்கவில்லை.

முகேஷ் அம்பானியின் குடும்பம்

முகேஷ் அம்பானி, மனைவி மற்றும் குழந்தைகள்

முகேஷ் மற்றும் நீதா அம்பானி தம்பதியருக்கு இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஏற்கெனவே ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் அதே வேளையில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் அவர் உள்ளார்.

இவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குநராக உள்ளார். மூவரில் இளையவரான ஆனந்த் அம்பானி 2020 ஆம் ஆண்டில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் கூடுதல் இயக்குநராக சேர்ந்தார், மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய எரிசக்தி திட்டத்தின் இயக்குனர் ஆனார்.

சாதனை குடும்பம்

முகேஷ் அம்பானியின் நேற்றைய கருத்துக்கள் பற்றி பிரபல சந்தை ஆய்வாளர் அஜய் போட்கே கூறியதாவது:

‘‘கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னணியில் இருப்பதன் மூலமும், ஜியோ மார்ட் புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் மூன்றாம் தலைமுறையினர் தங்கள் தாத்தா மற்றும் தந்தை இருவருக்கும் தகுதியான வாரிசுகள் என்பதை ஏற்கெனவே நிரூபித்துள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை மற்றும் டிஜிட்டல் தளங்களை வெளிக்கொணர்வதில் அவர்களின் பங்கு நன்கு அறியப்பட்டதாகும். அடுத்த தலைமுறை ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய எல்லைகளை தொடுவதற்கும், எரிசக்தி, இவி தொழில்நுட்பங்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக பரிணாம வளர்ச்சி அடைய உதவும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது’’ எனக் கூறினார்.

கூகுள், பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி ஆகியவை நிறுவனத்தின் சில்லறை மற்றும் டிஜிட்டல் அலகுகளில் முதலீடு செய்த 2020 ஆம் ஆண்டின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மெகா பங்கு விற்பனையின்போது ஈஷா மற்றும் ஆகாஷ் அம்பானி இருவரும் தங்கள் முத்திரையை பதித்தனர்.

அம்பானிகளின் அடுத்த தலைமுறையும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் இரண்டையும் வெளியிடுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

திருபாய் அம்பானி

இளம் வயதிலேயே தொழிலில் சாதனை படைப்பது என்பது அம்பானியின் குடும்பத்தில் வழி வழியாகவே நடைபெறுகிறது. 1977 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகத் தொடங்கிய முகேஷ் அம்பானி, 20 வயதில் இளமைக் காலத்தில் சிறப்பாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைத் தொடங்கிய தொழில் அதிபர் திருபாய் அம்பானியும் இளமைக்காலத்திலேயே தனது சாதனை பயணத்தை தொடங்கினார். அவர் அந்த காலத்திலேயே ஏடனுக்கு பயணம் செய்தார்.

ஷெல் தயாரிப்புகளின் ஒரே விற்பனையான ஏ. பெஸ்ஸே & கோ. லிமிடெட் நிறுவனத்தில் தனது 17 வயதில் பணியாற்றினார். 1958 ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 26 வயதாகும் அவர், மும்பைக்குத் திரும்பி, தனது முதல் நிறுவனமான ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

கல்வி

3 mins ago

தமிழகம்

5 mins ago

இணைப்பிதழ்கள்

29 mins ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

49 mins ago

சுற்றுலா

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்