இவரைத் தெரியுமா?- கோவிந்த் ராஜன்

By செய்திப்பிரிவு

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரியாக ஆகஸ்ட் 2015லிருந்து பொறுப்பு வகிக்கிறார். ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மொபைல் பண பரிவர்த்தனை பிரிவான ப்ரீசார்ஜ் நிறுவனத்தின் தலைமைச் செயல் பாட்டு அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் மொபைல் பிரிவு மற்றும் நுகர்வோர் பிரிவுகளில் தலைமை சந்தை அதிகாரியாக பணியாற்றியவர். ஏர்டெல் மொபைல் வர்த்தகப் பிரிவின் (ஏர்டெல் மணி) தலைமைச் செயல் அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் இருந்தவர்.

1997 ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் நிர்வாக பயிற்சி பெறுநராக பணிக்குச் சேர்ந்து 15 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

ஹெச்யுஎல் நிறுவனத்தின் விற்பனை செயல்பாடுகள் துறை தலைவராகவும், தென் ஆப்பிரிக்க துணைத் தலைவராகவும் இருந்தவர்.

ஐஐஎப்டி கல்வி நிறுவனத்தில் சர்வதேச வர்த்தகத்தில் உயர்கல்வி முடித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்