சஹாரா சொத்துகளை விற்க செபிக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

முதலீட்டாளர்களிடம் இருந்து முறைகேடாக திரட்டிய தொகையை சஹாரா நிறுவனம் திருப்பி தராமல் இருக்கிறது. இதன் காரணமாக சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் கடந்த இரண்டு வருடங்களுக்கு (மார்ச் 2014 முதல்) மேல் சிறையில் இருக்கிறார்.

அவருக்கு பிணை வழங்க 10,000 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த தொகையை செலுத்த முடியாததால் சுப்ரதா ராய் சிறையில் இருக்கிறார். சஹாரா நிறுவனத்தின் சொத்துகளை வாங்க யாரும் முன்வராததால் எங்க ளால் பிணைத்தொகையை செலுத்த முடியவில்லை என்று சஹாரா நிறுவனம் முன்பு நீதிமன்றத் தில் தெரிவித்திருந்தது. இப்போது சஹாரா நிறுவனத்தின் சொத்து களை `செபி’ விற்க தடை ஏதும் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ். தாக்கர் கூறினார்.

சஹாராவின் 86 சொத்துகள் `செபி’ வசம் உள்ளன. இந்த சொத்து களின் தற்போதைய சந்தை மதிப்பு 40,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சஹாரா நிறுவனத்தின் வழக்க றிஞர் வாதாடும் போது உலகத்தில் எந்த குற்றமும் செய்யாத ஒரு நபர் இரண்டு வருடங்களாக சிறையில் இருப்பது உலகத்தில் எங்கேயும் இல்லாதது என்று வாதாடினார்.

எங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள், 1.87 லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள நபர்கள் கடனை திருப்பி செலுத்தாது இருப்பது உலகில் எங்கேயும் நடந்தது இல்லை என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

11 mins ago

உலகம்

32 mins ago

வாழ்வியல்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்