இவரைத் தெரியுமா?- ருத்ரதேஜ் சிங்

By செய்திப்பிரிவு

முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைவர். 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை யுனிலீவர் நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிரிவிற்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

2003-ம் ஆண்டு யுனிலீவர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். இந்நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக தலைவர் மற்றும் ஆசிய பிரிவிற்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

1996 முதல் 99 வரை டாபர் நிறுவனத்தில் பிராண்ட் மேனேஜர் பொறுப்பில் இருந்தவர். ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பும் டெல்லி பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

சர்வதேச தலைமை மார்க்கெட்டிங் சபை வழங்கும் மார்க்கெட்டிங் பிரிவிற்கான விருதைப் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்