ரிலையன்ஸ் சிமென்டை வாங்கியது பிர்லா கார்ப்

By செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் இன்பிரா நிறுவனத்தைச் சேர்ந்த சிமென்ட் பிரிவை, பிர்லா கார்ப் நிறுவனம் வாங்குகிறது. இந்த இணைப்பின் மதிப்பு 4,800 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் பிர்லா கார்ப் நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1.55 கோடி டன்னாக உயர்ந்திருக்கிறது. முன்னதாக பிர்லா கார்ப் நிறுவனம் ஆண்டுக்கு 1 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்தது.

ரிலையன்ஸ் சிமென்ட் நிறுவனத் தின் அனைத்து பங்குகளையும் பிர்லா கார்ப் வாங்குகிறது. ரிலையன்ஸ் சிமென்ட் நிறுவனத் துக்கு மத்திய பிரதேசத்தில் மைஹார், உத்திரப்பிரதேசத்தில் குந்தன்கனி மற்றும் மஹாராஷ் டிரத்தில் புத்திபுரி ஆகிய இடங் களில் தொழில்சாலைகள் உள்ளன. அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமம் கடன்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தவிர பாதுகாப்பு துறையில் கவனம் செலுத்த வும் இந்த குழுமம் முடிவெடுத் திருக்கிறது. மார்ச் 2017-ம் ஆண்டுக்குள் கடன் இல்லாத குழுமமாக மாற நிறுவனம் திட்ட மிட்டிருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்துக்கு 16,000 கோடி ரூபாய் கடன் உள்ளது.

சிமென்ட் துறையில் நிறுவனங் கள் இணைவது சமீபத்தில் அதிகமாக நடந்துவருகிறது. தேவை குறைவாக இருப்பதால் சில நிறுவனங்களால் சந்தையில் நிலைக்க முடியவில்லை. கடந்த ஏப்ரலில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஒரு ஆலையை  சிமென்ட் வாங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்