தொழில் புரிவதற்கு ஏற்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் பிரதமர்: நரேந்திர மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

வெளிப்படையான வரி அமைப்பு உட்பட இந்தியாவில் தொழில் புரி வதற்கு ஏற்ற கொள்கையளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று உலக முதலீட்டாளர்கள் மத்தியில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மும்பையில் மேக் இன் இந்தியா 2016 வாரத்தை தொடங்கிவைத்து பேசும் பொழுது இதனை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் 68 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் 1,000 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவிற்கு வாருங்கள். நீங்கள் தொழில் செய்யும் இடமாக இந்தியாவை உருவாக்குங்கள். மேக் இன் இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணம். வரி அமைப்பில் நாங்கள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள் ளோம். மேலும் நிலையான, முன் கூட்டியே கணிக்கக்கூடிய வெளிப் படையான வரி அமைப்பை உரு வாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தொழில் தொடங்கு வதற்கு ஏற்ற வரி அமைப்பு உருவாக்கப்படும்.

நண்பனாக உங்களுக்கு ஒரு ஆலோசனையை கூற விரும்புகிறேன். நீங்கள் தாமதிக்க வேண்டாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு முதலீடு செய்யுங்கள். நீங்கள் ஒரு படி முன்னெடுத்து வைத்தால். எனது அரசாங்கம் இரண்டு படிகள் எடுத்து வைக்கும்.

அறிவுசார் சொத்துரிமை கொள்கை இறுதி கட்ட நிலையில் உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், தேவையும் அதிகமாக இருக்கிறது. இதனால் தான் இந்தியா சர்வதேச அளவில் தொழில் செய்வதற்கு மிக சாதகமான இடமாக உருவாகி வருகிறது. புதிய பரிந்துரைகளால் முதலீடு 27 சதவீதம் உயர்ந்துள்ளது. 2015-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 48 சதவீதம் அதிகரித் துள்ளது. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்திக் குறியீடு 7 சத வீதமாக இருக்கிறது. உள்கட்டமைப் பும் டெக்ஸ்டைல், உற்பத்தி துறை, விவசாயத் துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளில் முதலீடு வந் துள்ளதால் வேகமாக வளர்ச்சி யடையும் பொருளாதாரமாக இந்தியா உருவாகியுள்ளது.

மேலும் அரசு புதிய முதலீடு உள்கட்டமைப்பு அமைப்பை ஏற்படுத்த இருக்கிறது. உற்பத்தி துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும். நாட்டின் மொத்த ஜிடிபியில் 25 சதவீதம் பங்களிப்பை செய்யும் அளவுக்கு உற்பத்தி துறை வளர்ச்சியடையும் என்று உறுதியளிக்கிறேன்.

மேலும் எனது அரசு இளைஞர்களின் தொழில் முனைவு திறனை ஊக்குவிக்க 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா (தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் பல்லாயிரக்கணக்கான இளை ஞர்களுக்கான வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 mins ago

விளையாட்டு

8 mins ago

உலகம்

15 mins ago

க்ரைம்

21 mins ago

வணிகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்