யு.கே சின்ஹா பதவி காலம் மேலும் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

செபி தலைவர் யு.கே.சின்ஹாவின் பதவி காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது பதவி காலம் இன்றுடன் (பிப் 17) முடிவடையும் சூழலில், அடுத்த வருடம் மார்ச் 1-ம் தேதி வரை இவரது பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது

கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் செபி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது மேலும் ஒருவருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை டாக்டர் மேத்தா இந்த பதவியில் நீண்ட காலம் இருந்தார். அவருக்கு பிறகு அதிக ஆண்டுகள் தலைவராக இருப்பது யு.கே.சின்ஹாதான். பிஹார் பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் 1978-ம் ஆண்டு சேர்ந்தார்.

தலைவரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டது. ஆனால் கருத்தொற்றுமை ஏற்படாததால் சின்ஹா மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

செபிக்கு முன்பாக யூடிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைவராக யு.கே.சின்ஹா இருந்தார். எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, முன்னாள் எப்.எம்.சி. தலைவர் ரமேஷ் அபிஷேக் மற்றும் தாமஸ் மேத்யூ உள்ளிட்டோர் பெயர்களும் இந்த பட்டியலில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்