தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 குறைவு; இன்றைய நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 168 குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4548- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36384-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39296-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 30பைசா குறைந்து ரூ73.00 -க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,000 ஆக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்