தங்கச் சுரங்கத்திற்கான உரிமையை பெற்றது வேதாந்தா

By பிடிஐ

இந்தியாவில் முதன்முதலில் நடை பெற்ற தங்கச் சுரங்கத்திற்கான ஏலத்தில் வேதாந்தா நிறுவனம் குத்தகை உரிமையை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை சத்தீஸ்கர் மாநில அரசு நேற்று தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரி லிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஹ்மாரா எனும் இடத்தில் தங்கச் சுரங்கம் உள்ளது.

13 மணி நேரம் நடைபெற்ற ஏலத்தில் 160 பேர் ஏலம் கோரினார்கள். இதில் வேதாந்தா நிறுவனம் இந்திய சுரங்க பணியகம் நிர்ணயித்திருந்த விலையை விட 12.55 சதவீதம் அதிகமாக ஏலத் தொகையாக கோரினார்கள். இந்திய சுரங்க துறை ஒரு ட்ராய் அவுன்சுக்கு 74,712 ரூபாய்க்கு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண் சிங், தங்க சுரங்க குத்தகை ஏலம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்