எல்விபி-யின் புதிய சிஇஓ-வாக பார்த்தசாரதி முகர்ஜி நியமனம்

By செய்திப்பிரிவு

கரூரை தலைமையாக கொண்டு செயல்படும் லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பார்த்தசாரதி முகர்ஜி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவரது நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது. பொறுப்பேற்றதில் இருந்து மூன்று வருடங்களுக்கு இந்த பதவியில் இருப்பார்.

இதற்கு முன்பு தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த ராகேஷ் ஷர்மா, கனரா வங்கியின் தலைமை பொறுப்புக்குச் சென்றுவிட்டதால், பார்த்தசாரதி முகர்ஜி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

பி.முகர்ஜி வங்கித்துறையில் 33 வருட அனுபவம் மிக்கவர். தற்போது ஆக்ஸிஸ் வங்கியின் சர்வதேச தொழில் பிரிவை கவனித்து வருகிறார். ஆக்ஸிஸ் வங்கியில் 21 வருடங்கள் பணியாற்றியவர். முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 12 வருடங்கள் பணியாற்றியவர். 1982-ம் ஆண்டு வங்கித்துறையில் இணைந்தார்.

தலைமை பொறுப்புக்கு 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங் கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 7.3 சதவீதம் உயர்ந்து 97.65 ரூபாயில் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்