75% இருசக்கர வாகனங்கள் காப்பீடு செய்யப்படவில்லை: ஐசிஐசிஐ லொம்பார்டு ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

நாட்டில் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் காப்பீடு எடுக்கப்படாமலேயே ஓடிகொண்டிருப்பதாக ஐசிஐசிஐ லொம்பார்டு சர்வே கூறியுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் வாகன எண்ணிக்கையில் 70 சதவீதம் இருசக்கர வாகனங்கள் தான் என்றும், இவர்களில் 75 சதவீதம் பேர் முறையான வாகன இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஓட்டிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளது. காப்பீட்டு தேதி காலாவதி ஆன பிறகும் புதுப்பிக்காமல் அல்லது புதிதாக எடுக்காமலேயோ இந்த 75 சதவீத வாகனங்களும் ஓடிக் கொண்டிருப்பதாக சர்வே தெரிவித்துள்ளது.

தவிர இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் தவிர்த்து பதிவு செய்யப்பட்டுள்ள பிற வாகனங்கள் எண்ணிக்கை 3.29 கோடியாக உள்ளது. இதில் சுமார் 95 லட்சம் வாகனங்கள் இன்ஷூரன்ஸ் செய்யப்படவில்லை.

இந்த சர்வே தொடர்பாக பேசிய ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனத் தின் கிளைம் பிரிவு தலைவர் சஞ்செய் தத்தா, இடையில் நிறுத்தப் பட்ட இரு சக்கர வாகன இன்ஷூ ரன்ஸ்களை புதுப்பிக்க முகவர்கள் மூலம் வாய்ப்பளிப்பதாக தெரிவித் தார். இவற்றை ஒழுங்குமுறைப் படுத்த வேண்டும்.

ஐசிஐசிஐ லொம்பார்டு இன்ஷூ ரன்ஸ் புதிதாக மூன்று ஆண்டுகள் காலம் கொண்ட புதிய இரு சக்கர வாகன காப்பீடு பாலிசியை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. இதுவரை 2.7 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வும், நீண்ட கால காப்பீடு திட்டங் களால், பாலிசியை ஆண்டுக் காண்டு புதுப்பிப்பது, பிரீமியம் அதிகமாக கட்டுவதை தவிர்ப்பது போன்றவை சாதகமான அம்சங்க ளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்