பெட்ரோல், டீசல் விலை உச்சம்: ராஜஸ்தானில் லிட்டர் ரூ. 105.80- க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டெல்லியில் பெட்ரோல் விலை 94.76 -ஆக உள்ளது. டீசல் ரூ. 85.66- ஆக உள்ளது. மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.100.98 , 92.99- ஆக விற்பனையாகிறது.

நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை காணப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரால்- டீசல் விலை உச்சம் தொட்டன. பின்னர் சற்று குறைந்தது. இந்தநிலையில் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100-ஐத் தாண்டியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.63-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 95.99 ரூபாய், டீசல் லிட்டர் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து லிட்டர் 96.23 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை 94.76 ஆக உள்ளது. டீசல் ரூ. 85.66 ஆக உள்ளது. மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.100.98 , 92.99 ஆக விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ. 94.76 ஆக உள்ளது. டீசல் விலை 88.51 ஆக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

ஜோதிடம்

29 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்