தங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 184 குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23- குறைந்து ரூ.4635- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.184 குறைந்து ரூ.37080-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39952-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 90 பைசா குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ76.60 -க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,600 ஆக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

விளையாட்டு

13 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்