இவரைத் தெரியுமா?- ஜோசப் ஜிம்மென்ஸ்

By செய்திப்பிரிவு

ஸ்விட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்ட்டிஸ் வேக்ஸின் அண்ட் டையாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2007-ம் ஆண்டு பிரிவுத் தலைவராக நோவார்ட்டிஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் நோவார்ட்டிஸ் இண்டர்நேஷனல், நோவார்ட்டிஸ் கன்ஸ்யூமர் ஹெல்த் ஆகிய பிரிவிற்கு தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார்.

ஹெச்.ஜெ.ஹெயின்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

வெஸ்ஸன் பீட்டர் புட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

மருந்து நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் ஐரோப்பிய கூட்டமைப்பின் இயக்குநராக இருந்தவர்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்