நாடு முழுவதும் இயக்க ஏர்கோஸ்டாவுக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

பிராந்திய அளவில் செயல்பட்டு வரும் ஏர்கோஸ்டா நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் விமானங்களை இயக்குவதற்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதி மூலம் இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு விமான போக்குவரத்தை தொடங்க இந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

நிறுவனத்தின் துணை தலைமைச் செயல் அதிகாரி விவேக் சவுத்திரி கூறும் போது 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கும். இந்த மாதம் 110 இருக்கை கொண்ட விமானம் கூடுதலாக இணைகிறது என்றார்.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் இரு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. `ஆரம்பத்தில் இரண்டு விமானத்துடன் ஐந்து நகரங் களுக்கு போக்குவரத்தை தொடங் கினோம். இப்போது நான்கு விமானங்களுடன் 9 நகரங்களை இணைக்கிறோம் என்று நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் லிங்காமனேணி தெரிவித்தார்.

தவிர அனைத்து பெருநகரங்களுக்கும் போதுமான அளவு விமான சேவை இருக்கிறது. இனி வளர்ந்து வரும் நிறுவனங்கள்தான் எங்கள் இலக்கு. இந்த நகரங்களை இணைக்க இரண்டு சிறிய ரக விமானங்களை வாங்க இருக்கிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

கல்வி

33 mins ago

சுற்றுச்சூழல்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்