விரைவில் புதிய ரசாயனக் கொள்கை: மத்திய அமைச்சர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அரசு விரைவிலேயே புதிய ரசாயனக் கொள்கையை வெளி யிட உள்ளதாக மத்திய ரசாயனத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூறினார். இந்தியா சுதந்திர மடைந்த பிறகு ரசாயனத்துறைக்கு தனி கொள்கை வகுக்கப்பட்டு அது வெளியாவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

ரசாயனக் கொள்கை வகுக் கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள தாக குறிப்பிட்ட அவர், விரைவி லேயே ரசாயனக் கொள்கை வெளியாகும் என்றார். தேசிய ரசாயன மேம்பாட்டு மையம் உருவாக்குவது உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்கள் புதிய கொள்கையில் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொள்கை வகுக்கும் முன்பாக அனைத்துத் துறையினரின் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் கொள்கை உரு வாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பல்வேறு அமைச்சகங் களின் பார்வைக்கு இது சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சகங்களின் கருத்துகள் ஏற்கப்பட்டுள்ளது. இறுதியாக அமைச்சகம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.

தேசிய ரசாயன பாதுகாப்பு மையம் அமைப்பது தொடர்பான பரிந்துரை மற்றும் ரசாயன அரி மான தடுப்பு அமைப்பு அமைப்பது குறித்தும் இந்த கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.

இது தவிர கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பெட்ரோ ரசாயன காம்ப்ளெக்ஸ் களை கட்டாயம் அமைக்க வேண் டும் என்றும் புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாட் டில் 16 சுத்திகரிப்பு ஆலைகளில் மட்டுமே பெட்ரோ ரசாயன காம்ப்ளெக்ஸ்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்