அதிகம் பேர் பார்த்த இணையதளம் அமேசான்

By பிடிஐ

கடந்த அக்டோபர் மாதம் பண்டிகை காலத்தில் மற்ற இ-காமர்ஸ் இணையதளங்களை விட அமேசான் இந்தியா இணைய தளத்தை அதிகம் நபர்கள் பார்த்திருப்பதாக இணையதள அனலிட்டிக்ஸ் நிறுவனமான காம்ஸ்கோர் தெரிவித்துள்ளது.

இணையதளம் மற்றும் மொபைல் மூலமாகவும் 20 கோடி பேர் அமேசான் இணையதளத்தை பார்த்திருக்கின்றனர் என்று காம்ஸ்கோர் கூறியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் பிளிப் கார்ட் இணையதளத்தை 16.4 கோடி நபர்களும் ஸ்நாப்டீல் இணையதளத்தை 10.9 கோடி நபர்களும் பார்த்திருக்கின்றனர். வருடாந்திர ஒப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2015 ஆம் ஆண்டு அக்டோபர் வரை அமேசான் துரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

கடந்த வருட அக்டோபரில் 8.5 கோடி பார்வையாளர்கள் அமேசான் இந்தியா இணைய தளத்தை பார்த்திருந்தனர். இந்த வருடம் 20 கோடியாக வளர்ச்சி யடைந்துள்ளது.

அதேபோல் பிளிப்கார்ட் இணையதளத்தை கடந்த வருடம் அக்டோபரில் 14 கோடி பார்வை யாளர்கள் பார்த்திருந்தனர். கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த பிளிப்கார்ட் இப்போது 2-வது இடத்தில் உள்ளது. இந்த வருடம் 16.3 கோடி நபர்கள் பார்த்திருக்கின்றனர்.

சமீபத்தில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட அறிக்கையின் படி இந்தியாவில் இ-காமர்ஸ் துறை 2019-ல் 6,000-7,000 கோடி டாலரை எட்டும் என்று கணித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

வணிகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்