ஜிஎஸ்டி-க்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க திட்டம்

By பிடிஐ

அதிகாரமளிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்கள் குழு அடுத்த மாதம் கூடி சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளதாக டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் இக்குழு கூட்டத்தைக் கூட்டி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

இக்குழுவின் தலைவராக இருந்த கேரள நிதி அமைச்சர் கே.எம். மாணி, பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். ஜிஎஸ்டி-க்கான அதிகார மளிக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக தனது ராஜிநாமா கடிதத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அனுப்பினார்.

இதையடுத்து அங்கீகரிக்கப்பட்டக் குழு புதிய தலைவரை தேர்தெடுக்க உள்ள னர். சரக்கு மற்றும் சேவை வரியை விதிப்பதற்கான அளவை நிர்ணயிப்பதில் மாநிலங்கள் விவாதித்து வருகிறது. மேலும் புதிய துணைக் குழு அமைக் கப்பட்டு மாநிலங்களிடமிருந்து தகவல்கள் பெற்று அதன்படி முடிவெடுக்கப்படும்.

அதிகாரமளிக்கப்பட்ட குழு சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று வந்துள்ளது. ஜிஎஸ்டியை எளிதாக மற்றும் திறம்பட செயல்ப டுத்துவது எவ்வாறு என்பதை அங்கு தெரிந்து கொண்டோம் என்று கூறினார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்