மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் ஏற்றம்

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இதனை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு நேற்று வர்த்தகத்தின் இடையே 1,800 புள்ளிகள் உச்சம் தொட்டு 48,172.85 ஆக காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14,128 ஆக உயர்ந்தது.

இந்த பட்ஜெட்டில் வங்கி துறை சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக வங்களின் பங்குகள் உயர்ந்தன. இன்டஸ்இன்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. உள்ளிட்ட வங்கித்துறை பங்குகள் உயர்ந்தன.

பட்ஜெட் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின் சென்செக்ஸ் குறியீடு 979.87 புள்ளிகள் உயர்ந்து 49,580.48 ஆக காணப்பட்டது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 356 புள்ளிகள் உயர்ந்து 14,634 ஆக உயர்ந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், பட்ஜெட் எதிரொலியாக 2வது நாளாக பங்கு சந்தை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சென்செக்ஸ் குறியீடு 49,945.91 ஆக உயர்ந்து 50 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவை நெருங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்