டிசம்பரில் ஓய்வு பெறுகிறார் நய்னா லால் கித்வாய்

By பிடிஐ

ஹெச்எஸ்பிசி இந்தியாவின் தலைவர் நய்னா லால் கித்வாய் வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார் என்று ஹெச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது. மேலும் ஹெச்எஸ்பிசி ஆசியா பசிபிக் இயக்குநர் குழுவில் இருந்தும் விலகுகிறார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இவரது எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துகள் என ஹெச்எஸ்பிசி ஆசிய பசிபிகின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் வோங் கூறியிருக்கிறார்.

கித்வாய் 2002-ம் ஆண்டு ஹெச்எஸ்பிசி-ல் இணைந்தார். ஹெச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் மற்றும் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இணைந்தார். அதன் பிறகு இந்திய பிரிவின் பொதுமேலாளர் ஆகவும், 2007-ம் ஆண்டு ஹெச்எஸ்பிசி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட் டார். 2009-ம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டார்.

`ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். பெண் கள் மேம்பாடு, தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன்’ என்று நய்னா லால் கித்வாய் தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்