இன்ஃபோசிஸ் லாபம் ரூ.3,398 கோடி

By பிடிஐ

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.3,398 கோடியை லாபமாக ஈட்டி யுள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை யான காலத்தில் நிறுவ னத்தின் லாபம் 9.8 சதவீதம் அதிகரித் துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.3,096 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் 17.2 சதவீதம் அதிகரித்து ரூ.15,635 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 13,342 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வசம் 100 கோடி டாலர் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக நிறுவ னத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவன வருமானம் 6.4 சதவீதம் முதல் 8.4 சதவீத அளவுக்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். முன்பு இந்த எதிர்பார்ப்பு 7.2 சதவீதம் முதல் 9.2 சதவீத அளவுக்கு இருந்தது. தற்போது மதிப்பீடு சற்று குறைந்துள்ளது.

வருமானம் குறைவுக்கான காரணத்தை நிறுவனம் தெரி விக்காத போதிலும், டாலருக்கு நிகரான பிற நாடுகளின் கரன்சிகளின் மாற்று மதிப்பு ஸ்திரமடைவதால் வருமானம் குறையும் என நிறுவனம் கணித்துள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தமட்டில் நிதி ஆண்டின் முதல் ஆறுமாத வருமானத்தை விட இரண்டாவது பாதி வருமானம் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் பிற்பாதியில் அதிக விடுமுறைகள் வருவது, காப்பீடு மற்றும் சில்லரை வர்த்தகத்துறை வருமானம் குறைவது ஆகியவையும் இதற்குக் காரணமாகும் என்று தலைமை செயல்பாட்டு அதிகாரி யு.பி. பிரவீண் ராவ் தெரிவித்தார்.

நிறுவனத்திலிருந்து வெளி யேறும் பணியாளர்களின் விகிதம் 2-ம் காலாண்டில் 19.9 சதவீதமாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ. 10 இடைக்கால ஈவுத்தொகை அறிவிப்பதாக நிறுவனம் தெரி வித்துள்ளது.

தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால் ராஜிநாமா

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) ராஜீவ் பன்சால் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. பதவி விலக விரும்புவதாக பன்சால் தெரிவித்ததாகவும் அவருக்குப் பதிலாக அப்பதவியில் எம்.டி. ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன்-செப்டம்பர் இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டதோடு சிஎப்ஓ பதவி விலகல் அறிவிப்பையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மட்டுமின்றி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் பதவியையும் பன்சால் வகித்துவந்தார். சிஎப்ஓ பதவியை ராஜிநாமா செய்துள்ள போதிலும் அவர் தொடர்ந்து இயக்குநர் குழுவின் ஆலோசகராக இருப்பார். நிதி சார்ந்த நடவடிக்கைகளில் டிசம்பர் 31, 2015 வரை அவர் இயக்குநர் குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குவார்.

மிகச் சிறந்த தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால், கடந்த 16 மாதங்களில் நிறுவன வளர்ச்சிக்கு அவர் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரது ராஜிநாமாவை ஏற்பதாகவும், எதிர்கால நடவடிக்கைகளில் அவர் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் விஷால் சிக்கா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறும் மூன்றாவது தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வி. பாலகிருஷ்ணன், எம்.டி. மோகன்தாஸ் பை ஆகியோர் நிதி அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்தவர்களாவர்.

தற்போது தலைமை நிதி அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள எம்.டி. ரங்கநாத், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இதற்கு முன்பு நிறுவன உத்திகள் வகுக்கும் பிரிவின் துணைத் தலைவராக இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

25 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்