‘பொருளாதார வளர்ச்சி 7.5%-க்கு மேல் இருக்கும்’

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சியை அதிகரிக்க பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர இருக்கிறோம். வளர்ச்சி 7.5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது.

இந்திய பொருளாதாரம் குறித்து எஸ் அண்ட் பி நிறுவனம் கூறிய கருத்து அவர்களுடைய கருத்து. அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்நாட்டு பொருளாதாரமும் நிலைப்பெற்று வருகிறது. அதனால் 7.5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி இருக்கும்.

இந்தியாவில் தொழில் புரிவதற் கான சூழல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில் தொழில்முனைவோர்கள் உரு வாகி வருகிறார்கள். தவிர அந்நிய முதலீட்டை அதிகப் படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர் களின் பிரச்சினை என்ன என்பது குறித்து அவர்களிடம் விவாதித் தோம். பல பிரச்சினைகளுடன் வரி தொடர்பான விஷயங்களையும் அவர்கள் கூறினார்கள். அவர் களது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.

இது தவிர பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பரிந்துரைகள் மத்திய அரசு வசம் உள்ளன. அது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும்.

மேலும் பட்ஜெட்டுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இந்த பரிந்துரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர மியூச்சுவல் பண்ட் துறையை சேர்ந்தவர்களும் தங்க ளது கருத்துகளை தெரிவித்திருக் கிறார்கள். இவை விரைவில் தீர்க்கப்படும். அதனால் வளர்ச்சி குறித்த கவலை தேவை இல்லை.

சர்வதேச பங்குச்சந்தை களுடன் ஒப்பிட்டால் இந்திய சந்தைகள் சிறப்பாக செயல்பட் டிருக்கின்றன என்று சக்தி காந்ததாஸ் கூறினார்.

நேற்று அந்நிய நிறுவன முத லீட்டாளர்களுடன் நடைபெற் றதை போல உள்நாட்டு முதலீட் டாளர்கள் பிரச்சினை குறித்து இன்று விவாதிக்கப்பட இருக் கிறது. எஸ் அண்ட் பி நிறுவனத்தின் தர மதிப்பீடு திங்கள் அன்று வெளியானது. இதில் அடுத்த இரு வருடங்களுக்கு இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்த முடியாது என்று தெரிவித்துவிட்டது. தற்போது இந்தியாவின் தர மதிப்பீடு `BBB-’ ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்