ஐரோப்பாவில் 80 லட்சம் கார்களில் மோசடி சாப்ட்வேர்: ஃபோக்ஸ்வேகன் ஒப்புதல்

By ராய்ட்டர்ஸ்

ஐரோப்பிய யூனியனில் 80 லட்சம் டீசல் கார்களில் புகை அளவு மோசடி சாப்ட்வேர் பொறுத்தப்பட்டு விற்பனை செய்துள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக நிறுவனம் ஜெர்மன் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விவரம் தெரி விக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் நகல் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2-ம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் அரசின் முன்னாள் செய்தித் தொடர் பாளரும், ஃபோக்ஸ்வேகன் நிறுவன தலைமை ஆதரவாள ருமான தாமஸ் ஸ்டெக் குறிப் பிட்டிருப்பதாவது, நிறுவனம் தயாரித்த 1.2 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2 லிட்டர் திறன் கொண்ட இஏ 189 இன்ஜின் உள்ள கார்களில் இத்தகைய மோசடி சாப்ட்வேர் பொறுத்தப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் முழு சாராம் சத்தையும் ஜெர்மனியில் வெளி யாகும் ஹாண்டெஸ்பிளாட் எனும் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

கடிதத்தின் நகல்கள் ஜெர்மன் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் போக்குவரத்து குழு மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

52 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்