18 வயதில் சிஏ பட்டம்: இந்திய இளைஞர் சாதனை

By பிடிஐ

தணிக்கையாளர் படிப்பான சிஏ படிப்பை முடித்து தொழில் முறையில் அதை பயிற்சி செய்வதற்கு ராம்குமார் ராமன் என்கிற 18 வயது இளைஞர் தயாராகியுள்ளார். 18 வயது நிரம்பிய இவர் துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

மிகவும் இளம் வயதில் தணிக்கையாளராக பயிற்சி செய்வதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார் இவர். தணிக்கையாளர் பட்டத்தை பெறுவதற்கு 3 ஆண்டுகள் தொழில் ரீதியில் பணிபுரிய வேண்டும். மிக இளம் வயதில் ஏசிசிஏ அங்கீகாரம் பெற்றவர் இவர்தான் என்று மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏசிசிஏ கூட்டமைப்பு கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஏசிசிஏ பட்டம் பெற விரும்புவோர் தங்களது படிப்பை 18 வயதில்தான் தொடங்குவர். மொத்தம் மூன்று கட்டங்களாக இது நடைபெறும். அறிவுத் திறன் சோதனை, செயல் திறன் மற்றும் தொழில் திறன் ஆகிய மூன்று திறமைகள் அடிப்படையில் மொத்தம் 14 தேர்வுகள் எழுத வேண்டும். இந்த 14 தேர்வுகளை 3 ஆண்டுகளில் எழுதி முடிக்க வேண்டும்.

இதற்கான சிறப்புப் பயிற்சியை 2012-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியதாகவும் ஜூன் 2015-ல் பயிற்சியை முடித்து விட்டதாகவும் ராமன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்