கோவிட்-19 கட்டுப்பாடு, மேலாண்மை: நிதி ஆயோக் வெளியீடு

By செய்திப்பிரிவு

கோவிட்-19 கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பாக இந்தியாவின் மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் பின்பற்றிய முறைகள்' என்னும் தொகுப்பை நிதி ஆயோக் வெளியிட்டது.

'கோவிட்-19 கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை: இந்தியாவின் மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் பின்பற்றிய முறைகள்' என்னும் தலைப்பிலான இந்த தொகுப்பை நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால், தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் மற்றும் கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வல் ஆகியோர் வெளியிட்டனர்.

"பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக சர்வதேச நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டியது நிறைய இருப்பினும், நமது கள செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம்," என்று இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

இந்தத் தொகுப்பை உருவாக்குவதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நிதி ஆயோக் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பெற்றது.

இந்தியாவின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகரங்கள் கொவிட்-19 கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை நிதி ஆயோக் வெளியிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்