இந்த ஆண்டு இறுதியில் தபால் துறை வங்கி

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு இறுதிக்குள் தபால் துறை வங்கியை மத்திய அரசு பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை அடிப்படையிலான பேமெண்ட் சேவைகள் வரும் 2017ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாத மத்தியில் நிதிஆயோக் அனுமதி கிடைக்கும், அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் பொதுத்துறை முதலீட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்கும். நவம்பர் மாதத்தில் அமைச்சரவை அனுமதி கிடைக்கும் என்று மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரி வித்தார். 300 கோடி ரூபாய் முதலீட்டு டன் தனி நிறுவனமாக வங்கி செயல்படும். இந்த புதிய நிறுவனம் தபால் துறையின் வருமான பகிர்வு அடிப்படையில் செயல்படும்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 11 நிறுவனங்கள் பேமெண்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. இதில் இந்திய தபால்துறையும் அடங்கும். ரிசர்வ் வங்கி விதிமுறை படி, டெபாசிட்கள், டெபிட் கார்டு உள்ளிட்ட சேவைகளை கொடுக்க முடியும். ஆனால் கடன் மற்றும் கடன் அட்டை வழங்க இயலாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

41 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

க்ரைம்

12 hours ago

மேலும்