சீனாவில் தினமும் 10,000 நிறுவனங்கள் தொடக்கம்

By பிடிஐ

பொருளாதாரத்தை முடுக்கிவிடும் நடவடிக்கையாக சீன அரசு தொழில்முனைவுக்கு ஊக்கம் கொடுத்துவருவதால் ஒவ்வொரு நாளும் 10,000 புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இதுவரை 60 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடங்கபட்டுள்ளன என்று சீனாவின் தொழில்துறை இணை அமைச்சர் ஜின் குவோபின் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இதில் பெரும்பாலானவை சிறிய நிறுவனங்கள் ஆகும். அரசாங்கம் கட்டணங்கள் மற்றும் வரிகளை குறைத்திருக்கிறது. இதனால் சிறிய நிறுவனங்களுக்கு நடப்பு ஆண்டில் முதல் பாதியில் 790 கோடி டாலர் தொகை மீதமாகி இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வருட ஜூன் மாதத்தில் சிறு நிறுவனங்களுக்கு 14.5 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறு நிறுவ னங்கள் பல சவால்களை சந்திக்கின்றன. பொருளாதார மந்தநிலை, பொருட்களின் விலை குறைவது, அதிக உற்பத்தி, செலவுகள் அதிகரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் சிறு தொழில்களுக்கு பாதிப்பாக உள்ளன.

பொருளாதார மந்த நிலை நிலவுவதால் புதிய நிறுவ னங்கள் தொடங்குவதற்கு ஊக்குவித்தோம். அதற்கான பிரசாரங்களை மேற்கொண்டோம். இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி யை பயன்படுத்தி புதிய நிறுவ னங்கள் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ஜின் குவோபின் தெரிவித்தார்.

இந்த தொழில்முனைவு பிரச் சாரம் உள்நாட்டு நுகர்வையும் அதிகப்படுத்தும் என்று சீனா நம்புகிறது. சீனப்பொருளாதாரம் ஏற்றுமதியை அதிகம் நம்பி யுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டுகளில் குறையும் என்று ஐஎம்எப் கணித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்