இமாச்சல பிரதேசத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மெகா திட்டம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

210 மெகாவாட் லுஹ்ரி பகுதி-I நீர் மின்சார திட்டத்துக்கான ரூ.1810 கோடி முதலீட்டு முன்மொழிதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சட்லஜ் ஆற்றின் மீது அமையவுள்ள 210 மெகாவாட் லுஹ்ரி பகுதி-I நீர் மின்சார திட்டத்துக்கான ரூ 1810.56 கோடி முதலீட்டு முன்மொழிதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 758.20 மில்லியன் அலகுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் இந்திய அரசு மற்றும் மாநில அரசின் ஆதரவோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியால் 2019 நவம்பர் 7 அன்று துவக்கி வைக்கப்பட்ட ரைசிங் ஹிமாச்சல் என்னும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

62 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. சுற்றுச் சூழலில் இருந்து வருடத்துக்கு 6.1 லட்சம் டன்கள் கரியமில வாயுவை குறைப்பதற்கு இது வழி வகுக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்