ரேஷன் கடை மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: ரூ.174.6 கோடி செலவில் 15 மாநிலங்களில் திட்டம்

By செய்திப்பிரிவு

நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் மத்திய அரசின் பரிசோதனை திட்டத்தை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயல்படுத்துகிறது.

2019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பரிசோதனைத் திட்டத்தை ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தலா ஒரு மாவட்டத்தில் அமல்படுத்த 15 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 31.10.2020-ல் நடத்திய ஆய்வு கூட்டத்தில், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் தலைமையில் 2.11.2020 அன்று நடந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு சேவைகள் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 2021-2022ம் ஆண்டிலிருந்து செறிவூட்டப்பட்ட அரிசியை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கும் வகையில் விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும் என இந்திய உணவு கழகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் 112 மாவட்டங்களில், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

34 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

43 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்