இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை: உரிம நிபந்தனையில் திருத்தம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையை பின்பற்றுவதற்காக, டெண்டர் முறையில் கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் உரிமம் நிபந்தனையை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்து திருத்தியுள்ளது.

இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களுக்கான தேவையை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கேற்ப உரிமம் நிபந்தனை வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யப்படுகிறது.

கீழ்கண்ட முன்னுரிமை அடிப்படையில், டெண்டர் அடிப்படையிலான வாடகை கப்பல்களுக்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டப்பட்டு, பதிவு செய்யப்பட்ட இந்தியருக்கு சொந்தமான கப்பல் வெளிநாட்டில் கட்டப்பட்டு, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, இந்தியருக்கு சொந்தமான கப்பல் இந்தியாவில் கட்டப்பட்டு, வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட, வெளிநாட்டினருக்கு சொந்தமான கப்பல் போக்குவரத்து துறை இயக்குனர் புதிய சுற்றறிக்கை வழங்கிய தேதி வரை, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கப்பல்களும், இந்திய கப்பல்களாக கருதப்பட்டு முதல் பிரிவின் கீழ் வரும்.

இந்தியாவில் கப்பல் கட்ட ஆர்டர் கொடுத்து, 25 % பணத்தை செலுத்திய இந்தியர் அல்லது இந்திய நிறுவனம், தற்காலிக பயன்பாட்டுக்காக, வணிக கப்பல் போக்குவரத்து சட்டத்தின் கீழ், கப்பல் போக்குவரத்து துறை தலைமை இயக்குனர் அனுமதி வழங்கிய வெளிநாட்டு கப்பல்களுக்கும் முதல் பிரிவின் கீழ் அனுமதி அளிக்கப்படும். இந்தியாவில் புதிய கப்பல் கட்டி முடிக்கப்படும் வரை இந்த உரிமம் காலம் இருக்கும்.

இது தவிர கப்பல் கட்டும் நிதியுதவி திட்டத்தின் கீழ் நீண்ட கால மானியத்தையும்(2016-2026), கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.61.05 கோடியை இதுவரை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், இந்தியாவில் கப்பல் கட்டுவதை ஊக்குவிக்கும். இது குறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலை நோக்கு திட்டத்தின் கீழ், உள்நாட்டில் கப்பல் கட்டுதலை ஊக்குவிக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் செயல்படுகிறது. இந்த உரிமம் வழங்குவதில் செய்யப்பட்டுள்ள மாற்றம், தற்சார்பு கப்பல் கட்டுதலில் முக்கியமான நடவடிக்கை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்