குறைந்தபட்ச ஆதரவு விலை; 5.33 லட்சம் விவசாயிகளிடமிருந்து 62.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

By செய்திப்பிரிவு

11785.68 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 62.42 லட்சம் மெட்ரிக் டன் நெல், 5.33 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல்

2020 21 கரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, சண்டிகர், கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 14ஆம் தேதி வரை 11785.68 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 62.42 லட்சம் மெட்ரிக் டன் நெல், 5.33 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 14-ம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 4.94 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 686.74 மெட்ரிக் டன் அவரை விதையும் உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 639 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 14-ம் தேதி வரை 25399.18 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 89592 பேல்களை, இந்திய பருத்தி நிறுவனம் 18618 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

9 mins ago

ஓடிடி களம்

23 mins ago

க்ரைம்

41 mins ago

ஜோதிடம்

39 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

48 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

56 mins ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்