ரெடியுஷ் டேட்டா நிறுவனத்தை வாங்கியது ஸ்நாப்டீல்

By செய்திப்பிரிவு

சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல் படும் நிறுவனமான ரெடியுஷ் டேட்டா நிறுவனத்தை இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப் டீல் வாங்கியுள்ளது. எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

ஆசிப் அலி என்பவரால் 2012-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத் துக்கு இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த இணைப்புக்கு பிறகு ரெடியுஷ் டேட்டா நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 2 லட்சத்துக்கு மேற்பட்ட விற்பனையாளர்கள் இருக்கிறார்கள்.

ஆசிப் மற்றும் அவரது குழுவினர் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவை மேம்படுத்துவார்கள் என்று ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோஹித்பன்சால் தெரிவித்தார்.

நிறுவனங்களை கையகப்படுத் துவதில் ஸ்நாப்டீல் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறது. இந்த வருடத்தில் பிரீசார்ஜ், மார்ட்மொபி, லெட்ஸ்கொமோ லேப்ஸ் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தியது. தவிர, ருபிபவர், கோஜாவஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது.

ஸ்நாப்டீல் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு 4 கோடி பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தில் சாப்ட்பேங்க், பாக்ஸ்கான், அலிபாபா மற்றும் இபே ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்