மெட்ஸ்பார்க்; மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம்: கேரளாவில் நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

கேரளாவில் மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு அமைக்கிறது

நாட்டின் முதல் மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவில் அமையவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆதரவு, சோதனை மற்றும் மதிப்பீடு போன்ற மருத்துவ சாதனத் தொழிலுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்க அதி முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்கள் துறையில் கவனம் செலுத்தப்படுகிறது.

‘மெட்ஸ்பார்க்’ என்ற மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்(SCTIMST) மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியில் திருவனந்தபுரத்தின் தொன்னக்கலில் உள்ள வாழ்க்கை அறிவியல் பூங்காவில் நிறுவப்பட உள்ளது.

இந்த மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் செப்டம்பர் 24-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

‘‘இது நாட்டின் உயிரி மருத்துவ சாதனங்கள் தொழிலுக்கு ஒரு மைல்கல் எனவும், பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குடன் ஒத்திருக்கிறது’’ எனவும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர்.சரஸ்வத் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

31 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

39 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

24 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்