தரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்த  தரக் கட்டுபாடு: தர்மேந்திர பிரதான் தகவல்

By செய்திப்பிரிவு

எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எஃகு இறக்குமதிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதைக் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எஃகுவின் தரத்தை அறியவும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைத் திட்டமிடுவதும் இதன் நோக்கமாகும்.

நாட்டில் தரமான எஃகு கிடைப்பதை உறுதி செய்யவும், தரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்துவதற்கும் எஃகு தர கட்டுபாடு உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.

தரமான எஃகுப் பொருட்கள் உற்பத்திக்காக எஃகுத் தொகுப்புகள் உருவாக்குவதை ஊக்குவிக்க திட்டக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையம்(செயில்) இந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 4.835 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்தது.

மற்றொரு பொதுத்துறை எஃகு நிறுவனமான, ராஷ்ட்ரிய இஸ்பாத் நிகாம் லிமிடெட் 1.153 மெட்ரிக் டன் எஃகுவை உற்பத்தி செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்