செபியுடன் வர்த்தக சந்தை எப்எம்சி இணைப்பு

By செய்திப்பிரிவு

பொருள்கள் வர்த்தக பங்குச் சந்தையான எப்எம்சி (பார்வேர்ட் மார்கெட் கமிஷன்) மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

நேற்று நடைபெற்ற இணைப்பு விழாவில் இதை பங்குச் சந்தை மணியடித்து முறைப்படி அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

முன்னோக்கு பொருள்கள் சந்தை (எப்எம்சி) 1953-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1988-ம் ஆண்டு செபி தொடங்கப்பட்டு 1992-ம் ஆண்டு அது சுயேச்சையான அமைப்பாக உருவாக்கப்பட்டது.

இரண்டு அமைப்புகளும் இணைக்கப்பட்டதன் மூலம் நமது பங்குச் சந்தை வளர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது என்பதை உணர முடியும் என்றும் அது எத்தகைய இலக்கோடு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றும் ஜேட்லி குறிப்பிட்டார். இனிமேலும் நாம் 6 சதவீத வளர்ச்சி அல்லது 8 சதவீத வளர்ச்சியோடு நின்றுவிட முடியாது. அதிக வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை தொடர்ந்து செய்து கொண்டே வருவோம். அதேபோல தேவை யான மாற்றங்களையும் கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டார்.

இந்த இணைப்பு குறித்து தனது பட்ஜெட்டில் ஜேட்லி முன்னரே குறிப்பிட்டிருந்தது குறிப் பிடத்தக்கது. இந்த இணைப்பு மூலம் பொருள்கள் சந்தை மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என்று செபி தலைவர் யு.கே. சின்ஹா குறிப்பிட்டார்.

இதனால் முன்பேர சந்தையில் நிலவும் அளவுக்கதிகமான யூக பேரங்கள் குறையும். இதற்கு ஏதுவாக செபி சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கி நிதி மசோதாவைக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பங்கு பரிவர்த் தனைகளை செபி எவ்விதம் முறைப்படுத்துகிறதோ அதைப் போன்று பொருள் களின் முன்பேர சந்தை செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியும். இதனால் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகள் பயனடைவர் என்று சின்ஹா சுட்டிக் காட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 mins ago

கருத்துப் பேழை

2 mins ago

தமிழகம்

6 mins ago

சினிமா

47 mins ago

இந்தியா

59 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்