கரோனா காலத்திலும் ரயில்வே சாதனை: கடந்த ஆண்டைவிட சரக்கு கையாளும் திறன் 10% அதிகம்

By செய்திப்பிரிவு

இந்திய ரயில்வேயின் சரக்கு கையாளும் திறன் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கரோனா காலத்திலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் ஏற்றப்பட்ட சரக்குகளின் அளவு மற்றும் வருவாயுடன் ஒப்பிடும் போது, 6 செப்டம்பர் 2020 வரையில் இந்திய ரயில்வேயில் ஏற்றப்பட்ட சரக்குகளின் அளவு மற்றும் மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் 6 செப்டம்பர் 2020 வரையில் இந்திய ரயில்வேயில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளின் எடை 19.19 மில்லியன் டன்களாகும். கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தின் 17.38 மில்லியன் டன்களோடு ஒப்பிடும் போது, இது 10.41 சதவீதம் (1.81 மில்லியன் டன்கள்) அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் ரூ 1836.15 கோடி வருவாயை சரக்கு போக்குவரத்தின் மூலம் இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ 1706.47 கோடியுடன் ஒப்பிடும் போது, இது ரூ 129.68 கோடி அதிகமாகும்.

இந்த மாதத்தில் 6 செப்டம்பர் 2020 வரையில் இந்திய ரயில்வேயில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளின் எடையான 19.19 மில்லியன் டன்களில், 8.11 மில்லியன் டன்கள் நிலக்கரி, 2.59 மில்லியன் டன்கள் இரும்பு தாது, 1.2 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள், 1.03 மில்லியன் டன்கள் உரங்கள் மற்றும் 1.05 மில்லியன் டன்கள் சிமெண்ட் அடங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்