டிக்டாக் அமெரிக்க வணிகத்தின் மதிப்பு ரூ.2.23 லட்சம் கோடி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கணிப்பு

By செய்திப்பிரிவு

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் சீனாவின் டிக்டாக் செயலியின் அமெரிக்க வணிக மதிப்பு 30 பில்லியன் டாலர்கள் அதாவது இந்தியா ரூபாய் மதிப்பில் 2.23 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கணித்துள்ளது.

ஆனால் நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்க விருப்பம் காட்டவில்லை என்றும் அதே பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கூறிய போது, ஆரக்கிள் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம், அதனால் டிக்டாக்-ஐ வாங்க முடியும் என்றார்.

இந்நிலையில் டிக்டாக் செயலியின் அமெரிக்க வணிகம் திங்கட்கிழமைக்குள்ளாக மைக்ரோசாப்ட்-வால்மார்ட் கூட்டணியின் கைக்கு வந்து விடும் என்று சில தரப்புகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் வீடியோ செயலியான டிக்டாக் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்பட வேண்டும் இல்லையேல் 90 நாட்களில் தடை செய்யப்படும் என்று அதிபர் ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க நெருக்கடி தாங்க முடியாமல் அதன் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில்தான் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட்டுடன் சேர்ந்து வால்மார்ட்டும் முன் வந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்