தங்கம் விலை: மாலையில் சரிவு: இன்றைய விலை நிலவரம்

By செய்திப்பிரிவு

தங்கத்தின் விலை இன்று காலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாத நிலையில் மாலையில் சரிவடைந்தது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்தநிலையில் தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வந்தது. இன்று காலை தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.5105 -க்கு விற்பனையானது. எனினும் பின்னர் இன்று மாலையில் தங்கத்தின் விலை குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.5076 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40608க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 42648 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை 1.20 ரூபாய் உயர்ந்து 76.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

47 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

32 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்