சரக்கு பெட்டிகளை கண்டறிய ரேடியோ அலைவரிசை ‘டேக்’- ரயில்வே நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ரேடியோ அலைவரிசை அடையாள டேக்-கை அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும் பொருத்த ரயில்வேத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரேடியோ – அலைவரிசை அடையாள டேக்குகளை (ஆர்எஃப்ஐடி) அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும், 2022 டிசம்பர் மாதத்திற்குள் பொருத்தி முடிப்பதென ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.

இது அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளின் தடத்தைக் கண்டறிய உதவும்.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 23,000 சரக்குப் பெட்டிகளுக்கு டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தப் பணி சிறிது மந்தப்பட்டாலும், தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ரயில்வேத் துறை சரக்கு ரயில் பெட்டிகள் தொடர்பான தகவல்களை பணியாளர்களைக் கொண்டு பராமரித்து வந்தாலும் இவற்றில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆர்எஃப்ஐடி கருவிகளால் சரக்குப் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்