தமிழகத்தில் உணவு பதப்படுத்தல் தொழிலில் முதலீடு செய்ய வாய்ப்புகள் ஏராளம்: வேளாண்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உணவு பதப்படுத் துதல் தொழிலில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ள தாக வேளாண்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூறினார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி "தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டு வாய்ப்புகள்" என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசும்போது கூறியதாவது:-

விவசாயத்துக்கு பல்வேறு மானிய உதவிகளை அளித்து தமிழகத்தில் 2-வது பசுமை புரட்சி ஏற்பட வழிவகை செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவரது நடவடிக்கையின் காரணமாக, கடந்த 2014-15ம் ஆண்டில் தமிழகத்தின் உணவு உற்பத்தி 127.95 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இதற்காக தேசிய அளவில் தமிழகத்துக்கு பல்வேறு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

சொட்டுநீர் பாசன மானியம்

சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம் அளிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். சிறுதானியங்கள், வேர்க்கடலை உற்பத்தியில் முதலிடத்தையும், கரும்பு உற்பத்தியில் 2-ம் இடத்தையும் தமிழகம் வகிக்கிறது. தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவற்றை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

நபார்டு வங்கியின் முதன்மை தலைமை மேலாளர் கே.வெங்கடேஸ்வர ராவ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது தமிழகத்தில் இறைச்சி, கோழிக்கறி, கடல் சார் உணவுகள், மீன்கள் பதப் படுத்தல் தொழில்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடி வரை முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

உணவு பதப்படுத்தல் தொழில் களுக்கு ஏற்றுமதி-இறக்குமதி வங்கி உள்பட பல்வேறு வங்கிகள் நிதியுதவி செய்கின்றன. தேசிய தோட்டக் கலை வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மானியங்கள் அளிக் கின்றன.

தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரூ.1,500 கோடி முதல் ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

உணவு பூங்கா

மிகப்பெரிய அளவிலான உணவு பூங்காக்கள் அமைப் பதற்கு மத்திய அரசு நிதி உதவி செய்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரியிலும், விருதுநகரில் மிகப்பெரிய உணவு பூங்காக்கள் உள்ளன. உணவு பூங்காக்களை மேம்படுத்துவதற்கென மத்திய அரசு பிரத்யேக நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உணவு பதப்படுத்தல் தொழில்களுக்கு கடன் வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களை பயன்படுத்தி ஆரம்ப அளவிலான உணவு பதப்படுத்தலில் கவனம் செலுத்தலாம். பின்னர் இதனை பெரிய அளவிலான உணவு பதப்படுத்தல் மையங்களுடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ராம் ராஜசேகரன் தமிழகத்தில் வேளாண் வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேசுகையில், உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி தொடர் பான மையத்தை தமிழகத்தில் தொடங்க தயாராக இருப்பதாக கூறினார்.

டாபே நிறுவன தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா சீனிவாசன், டான்பாஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினார். இந்த கருத்தரங்கை தமிழக அரசின் வேளாண்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி வழிநடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

உலகம்

31 mins ago

வணிகம்

48 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்