மியூச்சுவல் பண்ட் கையாளும் சொத்து மதிப்பு உயரும்

By பிடிஐ

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு வரும் 2018-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று இ அண்ட் ஒய் மற்றும் கேப் மியூச்சுவல் நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன. தற்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாக இருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் பண்ட் துறை ஆண்டுக்கு 16.84 சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. சர்வதேச அளவில் மியூச்சுவல் பண்ட் வளர்ச்சி 8.80 சதவீதமாக இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் வளர்ச்சி இரட்டிப்பாக இருக்கிறது.

இந்திய மியூச்சுவல் பண்ட் துறை சரியான திசையில் பயணிக்கிறது என்று இஅண்ட்ஒய் நிறுவனத்தின் முரளி பலராமன் தெரிவித்தார்.

அதே சமயத்தில் இந்திய ஜிடிபியில் சேமிப்பின் பங்கு 30.6 சதவீதமாக இருந்தாலும் மியூச்சு வல் பண்டுக்கு வரும் தொகை 7 சதவீதம் மட்டுமே. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நாடுவது, நிதி சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பது ஆகிய காரணங்களால் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது குறைவாக இருக்கிறது என்றும் கூறப்பட்டிருகிறது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்