டிவி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட மின்னனு சாதனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி: பியூஷ் கோயல் உறுதி

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சிப் பெட்டிகள், சி.சி.டிவிகள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவற்றைப் பெருமளவில், இந்தியாவிலேயே தயாரித்து, ஏற்றுமதி வாய்ப்புகளை மத்திய அரசு என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

மின்னணு மற்றும் கணிப்பொறி மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (இ எஸ் சி) உறுப்பினர்களுடன் காணொலி மூலமாக இன்று கலந்துரையாடிய அமைச்சர் இது போன்ற பொருள்கள் பற்றி குறிப்பான ஆலோசனைகள் வழங்குமாறும், இவற்றைப் போட்டியிடக் கூடிய திறன் கொண்டதாக மாற்றுவதற்குத் தேவையான கொள்கை அளவிலான மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறும் தொழில்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற பொருள்களைத் தயாரிப்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்கு அரசு உதவும் என்று அவர் கூறினார். மின்னணு உதிரிபாகங்கள் ஹார்டுவேர் துறை, புதுமை, ஆராய்ச்சி வளர்ச்சி, உள்நாட்டு முன்னோடி வழிவகைகளை விரிவுபடுத்துதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். சுயசார்பு கொண்டவையாகவும், அரசின் உதவி இல்லாமல் வளர்ச்சி அடைந்த தொழில் நிறுவனங்களும், தங்கள் முத்திரையைப் பதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொடர்பு, தகவல் தொடர்பு சார்ந்த சேவைப்பிரிவுகள், வர்த்தக வழிமுறை செயல்பாட்டு பிபிஓ பிரிவுகள் ஆகியவை தீர்வுகள் வழங்குபவர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான திட்டம் எம்ஐ இ எஸ் (Exports from India Scheme - MEIS), போன்ற திட்டங்கள் கால வரையறைக்கு உட்பட்டவை என்பதனாலும், ஏற்றுமதிக்குப் போட்டியிடத் தகுந்த பொருள்கள் என்பவை அந்தப் பொருள்களின் தொழில்துறையின் வலிமையாலும் பெறப்பட வேண்டியவை என்பதாலும், ஊக்கத் தொகையை மட்டுமே சார்ந்திருப்பது, பொருள்களை, ஏற்றுமதிப் போட்டிக்கு உகந்தவையாக மாற்றாது என்று அவர் கூறினார்.

குவாண்டம் தொழில்நுட்பம் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றுக்கான தேசியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, தொழில் துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். என் எம் கியூ டி ஏ கணக்கிடுதல், தொடர்பு, உணர்திறன், இரசாயனம், கிரிப்டோகிரபி இரகசிய எழுத்துக் கலை, இமேஜிங், இயந்திரவியல் ஆகியவற்றில் ஏற்படும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கான பொறியியல் தீர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதியின் தரம் மற்றும் துல்லியமான தரவுகளின் தேவை குறித்துப் பேசிய கோயல், இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியுடன் தமது அமைச்சகம் பேசி வருவதாகவும்,. மின்னணு மற்றும் கணிப்பொறி மென்பொருள் துறைக்கு முழு ஆதரவு உண்டு என்றும் அமைச்சர் உறுதியளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் விடுத்த அறைகூவலுக்கு ஏற்ப துறையினர் வளர வேண்டும் என்றும், அவர் கூறினார்.

சுயசார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், அரசும், தொழில்துறையும் பரஸ்பர நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர், எண்ணற்ற அளவிலான இன்னும் அறியப்படாமல் உள்ள, ஏராளமான வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிவதில் அரசும், தொழில்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொழில்துறை

செயலாற்ற உதவுகின்ற வகையிலான சுற்றுச்சூழலை உருவாக்கும் பணிகளை அரசு எடுத்து வருகிறது என்றும், தொழில்துறை புதிய திறன்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியப் பொருள்கள் உலகத்தரத்திற்கு ஏற்றவையாக இருக்கவேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில் அவை செயலாற்ற வேண்டும் என்றும், அதுவே சுயசார்பு இந்தியாவின் சாரமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

மின்னணு மற்றும் கணினி மென்பொருள் துறையில் இந்திய ஏற்றுமதியைப் பெருக்குவது குறித்து இ எஸ் சி தயாரித்த கொள்கை அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிட்டார். இந்த இரண்டு பிரிவுகளிலும் இந்திய ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் இந்த அறிக்கையில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்