புஞ்ச் லாயிட் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு

By செய்திப்பிரிவு

ராணுவ உதிரி பாக உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புஞ்ச் லாயிட் குழும நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

குவாலியரில் உள்ள ராணுவ உதிரிபாக ஆலையை விரி வாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இது தவிர புதிய ஆலையை நிறுவவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆலைக்கான இடத்தேர்வு நடந்து வருவதாகவும், ராஜஸ் தான், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இடத்தை பார்வையிட்டு வருவ தாகவும் நிறுவனத்தின் தலைவர் அதுல் புஞ்ச் தெரிவித்தார்.

ராணுவ உதிரி பாகத் தயாரிப்புக்கான ஆர்டர்களைப் பொறுத்து விரிவாக்கப் பணி களை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். குவாலியரில் மலான்பூர் எனுமிடத்தில் அமைந் துள்ள இந்நிறுவன ஆலை 65 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

ராணுவத்தில் பயன்படுத்தும் இஸட்யு 23 ரக விமான ஊடுருவல் தடுப்பு துப்பாக்கிகளை தரம் உயர்த்தும் நிறுவனங்கள் பட்டியலில் இந்நிறுவனத் தையும் சமீபத்தில் ராணுவ அமைச்சகம் சேர்த்துள்ளது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்