சென்செக்ஸ் 235 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று சரிவைக் கண்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 235 புள்ளிகள் சரிந்து 27866 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 63 புள்ளிகள் சரிந்து 8462 புள்ளிகள் முடிந்தது.

நிப்டியின் 50 பங்குகளில் 36 பங்குகள் சரிந்தன. 14 பங்குகள் மட்டும் லாபமாக வர்த்தகம் ஆனது. மும்பை பங்குச் சந்தையின் தொழில்நுட்ப துறை குறியீடுகள் மட்டும் ஏற்றம் கண்டிருந்தது. இதர குறியீடுகள் சரிவில் முடிந்தன.

நடப்பு கூட்டத்தொடர் நாளையோடு முடிய உள்ள நிலையில் முக்கிய இரண்டு மசோதாக்கள் மீது இன்னும் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் உள்ளதும் சந்தை பொருளாதாரத்தை பாதிக்கிறது என பங்குச் சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

நேற்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், பாஷ், டெக் மஹிந்திரா, ஜீ எண்டர்டெயின் மெண்ட், டிசிஎஸ் நிறுவ னங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின. டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, கோல் இந்தியா நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகம் ஆனது.

கடந்த மூன்று வர்த்தக நாட்களாக சந்தை தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. டாலருக்கு நிகரான சீன கரன்சி மதிப்பு சரிவு கண்டுள்ளதைத் தொடர்ந்து, இதர பண மதிப்புகளும் சரிந்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு

முக்கியமாக இந்திய ரூபாய், ஆஸ்திரேலியன் டாலர், தென் கொரியாவின் வோன் பண மதிப்பும் கணிசமாக சரிந்துள்ளது.

இந்த சந்தை அழுத்தத்தின் காரணமாகவும் இந்திய சந்தையில் இறக்கமான சூழல் எதிரொலித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்