சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு உயரும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை

By பிடிஐ

சர்வதேச அளவில் பங்குச்சந்தை மற்றும் கரன்ஸி சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சரிவுகள் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பாகும். இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதம் முதல் 9 சதவீதமாக இருக்கும் போது சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு சீனாவை விட அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறிய தாவது. இந்தியாவில் தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக் கப்படுகிறது.

தொழில்துறையை ஊக்கப் படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற் கான சீர்திருத்தங்கள் செய்யப் பட்டு வருகின்றன. உலக பொருளாதாரத்தில் மந்தமான நிலைமை இருக்கும் போது இந்தியா 8 சதவீதம் முதல் 9 சதவீத வளர்ச்சியை எட்டும். அத்தகைய சூழலில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தி யாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் தொழிலாளர் களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. முதலீட்டாளர்கள் முன்கூட்டி வரிவிதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம்.

இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது இதுதான். இங்கு முதலீடு செய்ய இருப்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு முதலீடு தேவை. இந்தியா முதலீடுகளை வரவேற்கிறது. நாங்கள் (இந்தியா) முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நாடாக இருக்க விரும்புகிறோம்.

சர்வதேச அளவில் முக்கியமான நாடுகள் தடுமாறும் போது கடந்த நிதி ஆண்டில் இந்தியா 7.3 சதவீத வளர்ச்சியை எட்டியது. இந்த வருடம் அதை விட கூடுதலான வளர்ச்சி அடைவோம். அடுத்த நிதி ஆண்டில் எங்களது வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்.

சீனாவின் வளர்ச்சி விகிதம் மாறிவிட்டது. இனியும் சீனா 9, 10, 11 சதவீத வளர்ச்சி அடைய வாய்ப்பு இல்லை. இது மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் சவால் ஆகும். இந்த சூழ்நிலையில் சீர்த்திருத்தங்களை வேகமாக மேற்கொள்ளும் பட்சத்தில் அதிக முதலீடுகள் இந்தியாவுக்கு வரும். வளர்ச்சி அதிகரிக்கும் இது இந்தியாவுக்கான வாய்ப்பு.

அதேசமயத்தில் அரசாங்கம் முடிவெடுக்கும் போது அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துதான் முடிவெடுக்க வேண்டும். இந்த செயல்பாடு நிலையாக இருந்தாலும் மெதுவாக நடக்கிறது. இது சவாலான சூழலாகும்.

சீனா யுவான் சரிவடைந்தது இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை. சர்வதேச சந்தைகள் சரிந்தால் இந்தியாவின் பங்குச்சந்தை மற்றும் கரன்ஸி சந்தை சரிந்தது. ஆனால் சில நாட்களில் சரிவில் இருந்து மீண்டது. இந்த சரிவு தற்காலிகமானது.

பெட்ரோலிய பொருட்கள் விலை குறைந்து வருவது இந்தியாவுக்கு சாதகமானது. அதில் சேமிப்பாகும் தொகை கட்டுமானத் துறையில் முதலீடு செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

11 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

38 mins ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

4 hours ago

மேலும்