10 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை புதுப்பிக்க ரூ.1.5 லட்சம் சலுகை: மத்திய அரசு பரிசீலனை

By பிடிஐ

சுற்றுச் சூழலை காப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை புதுப்பிக்க அரசு ரூ. 1.5 லட்சம் வரை நிதி உதவி அளிக்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரப் போவதாக மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இது தொடர்பான தனது அமைச்சகத்தின் பரிந்துரை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதாக அவர் கூறினார்.

இதன்படி பழைய வாகனங் களை விற்கும்போது அதற்கான சான்று அளிக்கப்படும். அடுத்து புதிய வாகனம் வாங்கும்போது வாகனத்தின் விலையில் ரூ. 50 ஆயிரம் சலுகை அளிக்கப்படும்.

கார் போன்ற சிறிய வாகனங் களுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்படும்.

கனரக வாகனங்களான லாரிகள், டிரக்குகளுக்கு அதிக பட்சம் ரூ.1.5 லட்சம் வரை சலுகை அளிக்கப்படும் என்று அவர் கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பொது போக்குவரத்து தொடர்பான சர்வதேச மாநாட்டில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.

துறைமுகங்களுக்கு அருகே 8 முதல் 10 பழைய வாகனங்களை வாங்கும் மையம் ஏற்படுத்தப்படும்.பழைய வாகனங்களை வாங்கி அதற்கான சான்று இங்கு அளிக் கப்படும்.இந்த வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அத்துடன் சுற்றுச் சூழலும் காக்கப்படும் என்றார்.

பழைய வாகனங்களை படிப்படியாக உபயோகத்திலிருந்து நீக்குவது என்பது சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாகும். அதேபோல பழைய வாகனங்களை மறு சுழற்சிக்கு உள்ளாக்குவது மிக பெரிய தொழில் நடவடிக்கை. இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும்.

அரசு மானியம் வழங்க முன்வரும் பட்சத்தில் மக்களும் தங்கள் வசம் உள்ள பழைய வாகனங்களை புதுப்பிக்க முன்வருவர். இதன் மூலம் சர்வதேச (யூரோ 6) தரத்தை எட்ட முடியும் என்றார். இந்தியாவின் சுற்றுச் சூழல் மற்றும் வாகன மாசு கவலையளிப்பதாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வாகன உற்பத்தியாளர்கள் யூரோ 6 தரத்தை எட்டும் அளவிலான வாகனங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

ஏற்கெனவே பசுமை தீர்ப்பாயம் வாகன உற்பத்தியாளர்கள் யூரோ 5 தரத்திலான வாகனங் களை உற்பத்தி செய்ய பரிந் துரைத்துள்ளது. வாகன உற்பத்தி யாளர்களும் சிறிது கால அவகாசம் கோரியுள்ளனர். யூரோ 5 தரத்துக்கு வாகனங்களை உருவாக்குவதை விட யூரோ 6 தரத்திலான வாகனங்களை தயாரிக்கலாம் என்றார்.

சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவுக்கு பயோ எரிபொருளில் இயங்கும் பஸ்களை குறைந்த விலைக்கு அளிக்க முன்வர வேண்டும். இத்தகைய வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக தேவை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 1.5 லட்சம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் அதிகபட்சம் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பஸ்கள்தான் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் பஸ்களுக்கான சந்தை மிகப் பெரியது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

எத்தனால்-டீசல் கலப்பில் இயங்கும் பஸ்களை தயாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத் தினார். ஆண்டுதோறும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ரூ. 8 லட்சம் கோடியை செலவிடுகிறது. எத்தனால் கலப் பில் இயங்கும் வாகனங்கள் தயாரிக்கப்படும்போது அது விவசாயிகளுக்கு (கரும்பு) பயன ளிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. போக்கு வரத்துத் துறையை மேம்படுத்தவும், இத்துறையில் நிலவும் ஊழலை ஒழிப்பதற்குமாக இந்த மசோதா தயாரிக்கப்படுகிறது.

மாநிலங்களின் வருவாயில் எந்த பங்கையும் மத்திய அரசு கோரவில்லை. மாறாக இந்த மசோதாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் போக்குவரத்துத் துறையை லஞ்சம் இல்லாத துறையாக உருவாக்க முடியும் என்றார்.

இந்தியாவில் லைசென்ஸ் வைத்துள்ளவர்களில் 30 சதவீதம் தவறானவை என்று அவர் குறிப்பிட்டார். அரசு விரைவிலேயே 2,000 சோதனை மையங்களை அமைக்க உள்ளது. இங்கு லைசென்ஸ் வழங்குவதோடு புகை சோதனையும் நடத்தப்படும்.

கிராமப் பகுதிகளில் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். பர்மிட் ராஜ் முறையை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சுற்றுலா வாகனங்களுக்கு சில சலுகைகளை அளிப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறோம்.

நீர்வழி போக்குவரத்தை ஊக்கு விப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். டெல்லியில் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீட்டில் இதை செயல் படுத்துவது குறித்து பரிசீலிக் கப்படும்.

96 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2 சதவீத சாலைகள் மூலம்தான் 40 சதவீத போக்குவரத்து மேற் கொள்ளப்படுகிறது. எனவே நெடுஞ்சாலையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கட்கரி கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

உலகம்

57 mins ago

ஆன்மிகம்

55 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்