சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணையின்றி ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு கடன்; மத்திய அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கை: முக்கிய தகவல்கள்

By செய்திப்பிரிவு

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணையின்றி 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு பற்றிய விரிவான பொருளாதார திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது, 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக அறிவிப்போம் எனக் கூறினார்.

இன்று அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:

* குறுந்தொழில் முதலீட்டு வரம்பு ரூ.25 லட்ச ரூபாயில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது.

* நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 20 கோடி ஆக உயர்வு

* சிறு தொழில் முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக அதிகரிப்பு

* நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி.

* வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் பெற அரசு உதவி செய்யும்

* இதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக தனியாக நிதி ஒதுக்கப்படும்

* சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணையின்றி 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்படும்

* இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்

* இந்த திட்டம் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்படும்

* 45 லட்சம் சிறுகுறு தொழிற்சாலைகள் பயனடையும் 4ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம்

* முதல் ஒராண்டு காலம் கடன் தவணை வசூலிக்கப்படாது

* புதிய கடன் பெற சொத்து பத்திரம் எதுவும் செலுத்த தேவையில்லை

* அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்

* சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

விளையாட்டு

26 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்